சொல் பொருள் விளக்கம்
(1) எழுத்து என்றது யாதனை எனின், கட்புலன் ஆகா உருவும், கட்புலன் ஆகிய வடிவும் உடைத்தாக வேறு வேறு வகுத்துக் கொண்டு தன்னையே உணர்த்தியும் சொற்கு இயைந்தும் நிற்கும் ஓசையாம். (தொல். சிறப்புப்பாயிரம். நச்.)
(2) எழுதப்படுதலின் எழுத்தே. (யா. வி. 1.)
(3) எழு என்பதன் அடியாகப் பிறந்த எழுதல் என்பது ஓசை எழுதலுக்கும் எழுப்புதலுக்கும் பொருந்தும் கிளத்தல் (ஓசை எழுப்புதல்) என்பதற்குக் ‘கிள’ என்பது பகுதி. இதில் நின்றும் “கிளவி’ என்னும் சொல் பிறந்து சொல்லையும் ஒரோவழி எழுத்தையும் உணர்த்தும். (தமிழ்மொழி வரலாறு; 28. கவிராசர்.)
எழுதப்படுவது எழுத்து என்பது பொதுவழக்கு. எழுத்து என்பது எழுதப்பட்ட கடிதத்தைக் குறித்தல் குமரி மாவட்ட வழக்காகும். என் எழுத்து வந்ததா? நீங்கள் போனதும் ஓர் எழுத்து எழுதுங்கள் என்பது உரையாடலில் வருவது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்