சொல் பொருள்
(வி) 1. விரும்பிய ஒன்றிற்க்கா வாடு, 2. குழல் போல் ஒலி, அகவு,
சொல் பொருள் விளக்கம்
விரும்பிய ஒன்றிற்க்கா வாடு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
pine, languish
sound as a lute, scream as a peacock
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கண் இனைபு கலுழ்பு ஏங்கினள் தோள் ஞெகிழ்பு வளை நெகிழ்ந்தனள் – கலி 147/2,6 கண்கள் வருந்தக் கலங்கி ஏங்கி அழுதாள், தோள்கள் மெலிந்து வளைகளும் நெகிழப்பெற்றாள் ஏங்கு வயிர் இசைய கொடு வாய் அன்றில் ஓங்கு இரும் பெண்ணை அக மடல் அகவ – குறி 219,220 ஊதுகின்ற கொம்பு(போன்ற) ஓசையையுடைய வளைந்த வாயையுடைய அன்றில் பறவை உயர்ந்த பெரிய பனையின்கண் உள்ள உள்மடலில் (இருந்து தம் பெடையை)அழைக்க உதியன் மண்டிய ஒலி தலை ஞாட்பின் இம்மென் பெரும் களத்து இயவர் ஊதும் ஆம்பல் அம் குழலின் ஏங்கி கலங்கு அஞர் உறுவோள் புலம்பு கொள் நோக்கே – நற் 113/9-12 உதியன் என்பான் சினந்து சென்ற ஒலிக்கின்ற இடத்தையுடைய போர்க்களத்தில் இம்மென்று விரைவாக பெருங்களத்துக் குழலூதுவோர் ஊதுகின்ற ஆம்பல் குழலின் இசையைப் போல் ஏங்கி கலங்கித் துன்பத்தை அடைவோளின் தனிமை வருத்தத்தைக் கொண்ட பார்வை மின்னு வர வான் ஏர்பு இரங்கும் ஒன்றோ அதன்_எதிர் கான மஞ்ஞை கடிய ஏங்கும் – குறு 194/1-3 (இந்த நெஞ்சின் நிலையை)என்னவென்று சொல்வது தோழி? மின்னல்வர முகில்கள் எழுந்து ஒலிக்கும், அதுமட்டுமோ? அதற்கு எதிராக காட்டு மயில்கள் விரைவாக அகவும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்