சொல் பொருள்
(வி) இகழ்
சொல் பொருள் விளக்கம்
இகழ்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
reproach
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நல் வழி கொடுத்த நாண் உடை மறவர் செல்லா நல் இசை பெயரொடு நட்ட கல் ஏசு கவலை எண்ணு மிக பலவே – மலை 387-389 வெற்றியாகிய)நல்ல தீர்வைக் கொடுத்த (இறந்துபட்ட)மான உணர்வு உள்ள வீரர்களின் அழியாத நல்ல புகழையுடைய பெயர்களோடு நட்ட (நடு)கற்கள் புறமுதுகிட்டுப்போனவரை இகழ்கின்ற கிளைத்துச்செல்லும் வழிகள் எண்ணிக்கையில் மிகப் பலவாம்; செல்லும் தேஎத்து பெயர் மருங்கு அறிமார் கல் எறிந்து எழுதிய நல் அரை மராஅத்த கடவுள் ஓங்கிய காடு ஏசு கவலை – மலை 394-396 செல்கின்ற இடத்தின் பெயரை உலகறியும் பொருட்டு கல்லை அகழ்ந்து அதன்கண் எழுதப்பட்டதும், நல்ல அடிமரத்தையுடைய மராமரத்தின் நிழலிலே கடவுள்(படிமங்கள்) ஓங்கிநிற்பதால் அது பெற்றிராத ஏனைய காடுகளை இகழ்கின்ற கிளைவழிகளில்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்