சொல் பொருள்
ஏட்டி – விரும்புகின்ற ஒன்று.
போட்டி – விரும்பும் ஒன்றுக்கு எதிரிடையாக வரும் ஒன்று.
சொல் பொருள் விளக்கம்
ஏடம், ஏடணை என்பவை விருப்பம்; விரும்பும் ஒன்று ‘ஏட்டி’யாம்; விரும்பி முயலும் ஒன்றற்கு எதிரிடையாக மற்றொன்று முட்டும்போது தானே போட்டி தொடங்குகின்றது. போட்டியில் நல்ல போட்டியும் அல்ல போட்டியும் உண்டு. ஏட்டிக்குப் போட்டி உள்ளச் சிறுமையால் ஏற்பாடுவதாம்.
போட்டிக்கு முடிவு உண்டோ? ‘போட்டா போட்டி’யாகி ஒன்றன் அழிவும், ஒன்றன் ஆக்கம் போன்ற அழிவும் கூடி இரண்டும் அழிந்து படவேயாகும்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்