சொல் பொருள்
(பெ) அடுக்கடுக்காய் அமைந்த ஒற் இடையணி,
சொல் பொருள் விளக்கம்
அடுக்கடுக்காய் அமைந்த ஒற் இடையணி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Woman’s jewelled girdle, in multiple layers
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புனல் மண்டி ஆடல் புரிவான் சனம் மண்டி தாளித நொய் நூல் சரணத்தர் மேகலை ஏணிப்படுகால் இறுகிறுக தாள் இடீஇ – பரி 10/9-11 புதுப்புனலில் திளைத்து ஆடல்புரிவதற்கு மக்கள் கூட்டம் நெருக்கியடித்துக்கொண்டு திரண்டெழ, காலுக்கு இதமான மென்மையான நூலினாலான மிதியடிகளை அணிந்தவராய், மேகலையாகிய ஏணிப்படுகால் ஆகிய இடையணியை மிகவும் இறுக்கமாகக் கட்டிப் பூட்டிக்கொண்டு – மேகலை ஏணிப்படுகால் – இருபெயரொட்டுப் பண்புத்தொகை, ஏணியினது படி போல ஒன்றற்கொன்று வடம் உயர்தலான் இரு கோவை முதல் முப்பத்திரு கோவை ஈறாக அமைந்த பல்வேறு மேகலையையும் ஏணிப்படுகால் என்றார். ஏணிப்படிகால் என்றும் வழங்குவதுண்டு. – பொ.வே.சோ உரை விளக்கம்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்