Skip to content

சொல் பொருள்

(பெ) 1. குற்றம், பிழை, 2. துன்பம்,

சொல் பொருள் விளக்கம்

குற்றம், பிழை,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

fault, blemish, suffering, affliction

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

நின்னொடு சொல்லின் ஏதமோ இல்லை-மன்
ஏதம் அன்று எல்லை வருவான் விடு – கலி 113/12,13

உன்னோடு பேசிக்கொண்டிருப்பதில் பிழையேதும் இல்லை அன்றோ?” “பிழையொன்றும் இல்லை, நாளை வருகிறேன் விடு!”

ஆதிமந்தி போல
ஏதம் சொல்லி பேது பெரிது உறலே – அகம் 236/20,21

ஆதிமந்தியைப் போல துன்பத்தைச் சொல்லிப் பெரிதும் மயங்குதல்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *