சொல் பொருள்
(பெ) 1. அன்னியப்பெண், 2. சக்களத்தி,
சொல் பொருள் விளக்கம்
1. அன்னியப்பெண்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Strange, unfamiliar woman, co-wife
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முதிர் பூண் முலை பொருத ஏதிலாள் முச்சி உதிர் துகள் உக்க நின் ஆடை ஒலிப்ப எதிர் வளி நின்றாய் நீ செல் – கலி 81/30-32 பூண்களையுடைய முதிர்ந்த முலைகளால் உன் மார்போடு பொருத பரத்தையின் கொண்டைமுடியிலிருந்து உதிர்ந்த பூந்தாதுக்கள் சிந்திக்கிடக்கும் உன் ஆடை ஓசையெழுப்ப, எதிர்காற்றில் வந்து நிற்பவனே! நீ போகலாம்!” காதலான் மார்பின் கமழ் தார் புனல் வாங்கி ஏதிலாள் கூந்தலிடை கண்டு மற்று அது – பரி 24/34,35 ஒரு காதற்பரத்தையின் காதலன் தன் மார்பில் கிடந்த மணங்கமழும் மாலையைக் கழற்றி நீரில் விட, அதனை நீர் இழுத்துச் செல்ல, அவனது இல்பரத்தை அதனை எடுத்துச் சூடிக்கொள்ள, ஓர் அயலாளின் கூந்தலில் தன் காதலன் மாலையைக் கண்டு,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்