Skip to content

சொல் பொருள்

(பெ.அ) 1. அந்நியமான, 2. சற்றும் தொடர்பற்ற, 3. பகையுள்ள

சொல் பொருள் விளக்கம்

1. அந்நியமான,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

strange, not connected with, inimical

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

ஏதில் மாக்கள் நுவறலும் நுவல்ப – குறு 89/2

அயலோரான அறிவிலிகள் குறைகூறுதலையும் செய்வர்

ஏதில் வேலன் கோதை துயல்வரத்
தூங்குமாயின் அதூஉம் நாணுவல் – அகம் 292/5,6

இதனுடன் சற்றும் தொடர்பற்ற வேலன் தன் மார்பில் மாலை அசைந்திட
வெறி ஆடுவானாயின் அதனையும் நாணி நிற்பேன்.

ஏதில் மன்னர் ஊர் கொள – அகம் 346/24

பகை மன்னரது ஊரினைப் பற்றிக்கொள்ள

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *