சொல் பொருள்
(பெ) 1. யாது, 2. எவ்வளவு, 3. காரணம், 4. இயைபு, பொருத்தம், 5. ஒரு செயல் நிகழ்வதற்கான வசதி,
சொல் பொருள் விளக்கம்
1. யாது,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
which, what, how much, cause, reason, harmony, that which facilitates
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: போது ஏர் உண்கண் கலுழவும் ஏது இல் பேதை நெஞ்சம் கவலை கவற்ற – நற் 144/3,4 பூப் போன்ற அழகிய மையுண்ட கண்கள் கலங்கிக் கண்ணீர் சொரியவும், யாதும் இல்லாத பேதை நெஞ்சம் கவலையால் வருந்தவும் – பின்னத்தூரார் உரை பல் ஊழ் புன் புற பெடையொடு பயிரி இன் புறவு இமை கண் ஏது ஆகின்றோ – குறு 285/4-6 பலமுறை புல்லிய முதுகையுடைய பெடையை அழைத்து, இனிய ஆண்புறா இமைப்பொழுதில் எவ்வளவு இன்பத்தை அடைகின்றது! போது ஏர் உண்கண் கலுழவும் ஏது இல் பேதை நெஞ்சம் கவலை கவற்ற – நற் 144/3,4 பூப் போன்ற அழகிய மையுண்ட கண்கள் கலங்கிக் கண்ணீர் சொரியவும், காரணம் இல்லாத பேதை நெஞ்சம் கவலையால் வருந்தவும் – தான் செய்யும் செயற்குரிய ஏது ஒன்றும் காணுதல் இல்லாத ஏழை நெஞ்சம் – கண் கலுழ்தலை நிறுத்தவும், கவலை நீங்குதற்குரிய காரணம் கண்டு அதனை விலக்கவும் மாட்டாது நெஞ்சம் கவலைகளின் வழிநின்று வருந்தினமையின் ஏதில பேதை நெஞ்சம் என்றும் — – ஔவை.சு.து.உரை, விளக்கம். ஏது இல பெய்ம் மழை கார் என மயங்கிய – ஐங் 462/1 காலமல்லாத காலத்தில் (காரணமில்லாமல்) பெய்த மழையைக் கண்டு கார்காலம் என்று தவறாக எண்ணிய – ஏதில – காரணமில்லாதன – மழை பெய்தற்குக் காரணமான பருவத்தைப் பெறாதனவாகிய மழை – – பொ.வே.சோ. உரை விளக்கம். நம் வரவினை புள் அறிவுறீஇயின-கொல்லோ தெள்ளிதின் காதல் கெழுமிய நலத்தள் ஏது இல் புதல்வன் காட்டி பொய்க்கும் திதலை அல்குல் தே மொழியாட்கே – நற் 161/8-12 மிக நெருங்கி வருகின்ற நம் வரவினை புள்ளினங்கள் கரைந்து அறியும்படி தெரிவித்தனவோ? – தெளிவாக காதல் பொருந்திய இயல்பினளான, இயைபு இல்லாதவற்றைப் புதல்வனுக்குக் காட்டிப் பொய்ம்மொழி கூறும் மஞ்சள் புள்ளித் தேமல் படர்ந்த அல்குலையும், இனிய மொழியையும் உடைய நம் காதலிக்கு – தந்தையைக் காட்டு என்னும் புதல்வற்கு இயைபில்லாத விளையாட்டுக் கருவிகளைக் காட்டும் – முகத்தால் பொய்யாயின கூறி அவன் கருத்தை மாற்ற முயல்வது கண்டு ஏதில புதல்வற் காட்டி – என்றும் —- – ஔவை.சு.து.உரை, விளக்கம். அம்ம வாழி தோழி நன்றும் எய்யாமையின் ஏது இல பற்றி அன்பு இலன் மன்ற பெரிதே மென்_புல கொண்கன் வாராதோனே – ஐங் 119 கேட்பாயாக, தோழியே! திருமணத்திற்குரிய நல்ல வழிகளை அறியாமையினால், அது நிகழ்வதற்குரிய வழிகளைத் தவிர மற்ற வழிகளைப் பற்றிக்கொண்டிருப்பதால் நம்மீது அன்பு இல்லாதவன், தெளிவாக, பெரிதும் – மென்புலமாகிய நெய்தல் நிலத்துக்குரிய தலைவன் – நம்மை மணந்துகொள்ள இன்னும் வராதவன்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்