Skip to content

சொல் பொருள்

1 (வி) ஒத்திரு, 2 (பெ) 1. அழகு, 2. கலப்பை

சொல் பொருள் விளக்கம்

ஒத்திரு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

resemble, beauty, plough

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மதி ஏர் வெண்குடை அதியர் கோமான் – புறம் 392/1

முழுமதியைப் போன்றிருக்கும் வெண்கொற்றக்குடையைக் கொண்ட அதியர் வேந்தன்

அரி ஏர் உண்கண் அரிவையர் ஏத்த – சிறு 215

செவ்வரி பொருந்தின அழகிய மையுண்ட கண்ணினையுடைய மகளிர் புகழ,

நல் ஏர் நடந்த நசை சால் விளை வயல் – மது 173

நல்ல கலப்பை உழுத விரும்புதல் அமைந்த விளைகின்ற வயல்களில்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *