சொல் பொருள்
(வி) 1. மேலேசெல், 2. (பெ) 1. காளை, 2. இடி, 3. எருமை, பன்றி போன்ற விலங்குகளின் ஆண்
சொல் பொருள் விளக்கம்
1. மேலேசெல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
climb, bull, thunderbolt, male of animals suchas pig, buffalo etc.,
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வேனில் ஓதி நிறம் பெயர் முது போத்து 5 பாண் யாழ் கடைய வாங்கி பாங்கர் நெடு நிலை யாஅம் ஏறும் தொழில – நற் 186/5-7 வேனில்காலத்து பச்சோந்தியின், தன் நிறத்தை மாற்றிக்கொள்ளும் முதிய ஆணானது பாணர்கள் யாழினை இசைக்க, அதனைக் கேட்டு, அருகிலிருக்கும் நெடியதாய் நிற்கும் யா மரத்தில் ஏறும் தொழிலையுடையது ஏறு உடை இன நிரை வேறு புலம் பரப்பி – நெடு 4 காளைகளையுடைய (பல்வேறு)இனம் சேர்ந்த மந்தையை(மேடான)முல்லை நிலத்தில் மேயவிட்டு நீல் நிற விசும்பின் வல் ஏறு சிலைப்பினும் – பெரும் 135 நீல நிற மேகத்தில் வலிய உருமேறு இடித்தாலும், திரி மருப்பு இரலை அண்ணல் நல் ஏறு அரி மட பிணையோடு அல்கு நிழல் அசைஇ – குறு 338/1,2 முறுக்கேறிய கொம்புகளையுடைய இரலையாகிய தலைமைப்பண்புள்ள நல்ல ஆண்மான் மென்மையையும் மடப்பத்தையும் கொண்ட பெண்மானோடு தங்குதற்குரிய நிழலில் ஓய்வெடுத்து
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்