சொல் பொருள்
(1) 1. ஏற்றுக்கொள், பெற்றுக்கொள், 2. எதிர், 3. இர, 4. கிரகி,
சொல் பொருள் விளக்கம்
1. ஏற்றுக்கொள், பெற்றுக்கொள்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
receive, oppose, stretch out in supplication, beg, absorb
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: எய்திய கனை துயில் ஏல்தொறும் திருகி மெய் புகு அன்ன கை கவர் முயக்கின் மிகுதி கண்டன்றோ இலனே – அகம் 379/14-16 பொருந்திய மிக்க துயிலை ஏற்குந்தோறும் மாறுபட்டு மெய்யினுள் மெய் புகுதலொத்த கைகளால் விரும்பிக்கொள்ளும் முயக்கத்தினும் மேம்பட்ட பொருளை யான் கண்டதில்லை திருந்து அடி தோய திறை கொடுப்பானை வருந்தல் என அவற்கு மார்பு அளிப்பாளை குறுகல் என்று ஒள் இழை கோதை கோல் ஆக இறுகிறுக யாத்து புடைப்ப ஒருவர் மயில் ஒருவர் ஒண் மயிலோடு ஏல இருவர் வான் கிளி ஏற்பில் மழலை – பரி 9/37-42 அவளின் திருத்தமான அடிகளில் படும்படியாகப் பணிந்து அவளுக்குத் தன் வணக்கமாகிய திறைப்பொருளைக் கொடுக்க, “வருந்தவேண்டாம்” என்று என்று ஆறுதல் கூறி அவனுக்குத் தன் மார்பினைத் தேவசேனை கொடுக்க, “அவளிடம் நெருங்கிச் செல்லாதே” என்று ஒளிரும் அணிகலன்களையுடைய வள்ளி, தன் மாலையையே கோலாகக் கொண்டு முருகனின் கைகளை மிகவும் இறுக்கமாகப் பற்றிக்கொண்டு, அடிக்க, ஒருவரின் மயில் ஒருவரின் மயிலோடு போர்தொடங்க, அந்த இருவருடைய உயர்ந்த கிளிகளும் தம் மழலைக் குரலால் ஏசத்தொடங்க, ஞால மீமிசை வள்ளியோர் மாய்ந்து என ஏலாது கவிழ்ந்த என் இரவல் மண்டை – புறம் 179/1,2 உலகத்தின் மேல் வண்மையுடையோர் இறந்தாராக பிறர்பால் ஏலாது கவிழ்ந்த எனது இரத்தைஅலியுடைய மண்டையை – மண்டை – உண்கலம். அடிகுவிந்து வாய் விரிந்திருப்பதனாலும், ஏற்கும்போது அதன் வாய் தோன்ற ஏந்துவதும், – ஏலாப்போது கவிழ்ந்து வைப்பதும் இயல்பாதல் பற்றி ஏலாது கவிழ்ந்த மண்டை என்றார். – ஔவை.சு.து.உரை, விளக்கம் பிறந்த தமரின் பெயர்ந்து ஒரு பேதை பிறங்கல் இடையிடை புக்கு பிறழ்ந்து யான் வந்த நெறியும் மறந்தேன் சிறந்தவர் ஏஎ ஓஒ என விளி ஏற்பிக்க ஏஎ ஓஒ என்று ஏலா அ விளி அ இசை முழை ஏற்று அழைப்ப அழைத்து_உழி செல்குவள் ஆங்கு தமர் காணாமை மீட்சியும் கூஉ_கூஉ மேவும் மடமைத்தே – பரி 19/58-65 தான் பிறந்த சுற்றத்தாரினின்றும் பிரிந்து ஓர் அறியா இளம்பெண் செறிவான பாறைக்கற்களுக்கு இடையிடையே புகுந்து, வழிதவறி, நான் வந்த வழியை மறந்துவிட்டேன் என்று தன் பெற்றோரை, “ஏஎ ஓஒ” என்று தன் அவர் கேட்கும்படி செய்ய, “ஏஎ ஓஒ” என்பதைக் கேட்காமல், அந்தக் கூவலின் ஒலியைமட்டும் மலையின் பிளவுகள் ஏற்று எதிரொலிக்க, அந்த அழைப்பொலியைக் கேட்டு அங்குச் சென்றவள், அங்கே தன் சுற்றத்தைக் காணாமல் மீண்டும் மீண்டும் கூவுதலை மேற்கொள்ளும் மடமையை உடையது
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்