சொல் பொருள்
குறிகேட்டு வருபவர் கேட்கும் ஐயத்தை வாங்கிக் கொண்டு நம்பும் வகையால் குறி கூறுதலால் குறிகாரரை ‘ஐயம் பிடுங்கி’ என்பது திண்டுக்கல் வட்டார வழக்காகும்
சொல் பொருள் விளக்கம்
குறிகூறுதல் என்பது வருபவர் முகக்குறி சொற்குறி கொண்டு கூறுவதே வழக்கம். குறிகண்டு கூறுவார் கூறிகூறுவார் ஆவர். குறிப்பறிதல், குறிப்பறிவுறுத்தல் என்பவை திருக்குறள் அதிகாரத் தலைப்புகள். கொண்டுவரும் செய்தியறிந்து அதற்குத் தகக் கூறுபவர் கோள் + தாங்கி = கோடாங்கி எனப்படுவார். குறிகேட்டு வருபவர் கேட்கும் ஐயத்தை வாங்கிக் கொண்டு நம்பும் வகையால் குறி கூறுதலால் குறிகாரரை ‘ஐயம் பிடுங்கி’ என்பது திண்டுக்கல் வட்டார வழக்காகும்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இது ஒரு திண்டுக்கல் வட்டார வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்