சொல் பொருள்
(வி) 1. ஒடி, 2. வளை, வளைத்து முரி,
சொல் பொருள் விளக்கம்
ஒடி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
break, bend, break by bending
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கந்து கால் ஒசிக்கும் யானை – அகம் 164/13 கட்டுத்தறியினைக் காலினால் ஒடிக்கும் யானை புள் உற ஒசிந்த பூ மயங்கு அள்ளல் – நற் 63/8 பறவைகள் வந்து உட்கார வளைந்து உதிர்ந்த பூக்கள் கலந்த சேறு இரும் சேறு ஆடிய நுதல கொல் களிறு பேதை ஆசினி ஒசித்த வீ ததர் வேங்கைய மலை கிழவோற்கே – நற் 51/9-11 கரிய சேற்றைப் பூசிக்கொண்ட நெற்றியையுடையதுமான கொல்லவல்ல ஆண்யானை இளைய ஆசினிப் பலாவின் கிளையை வளைத்து முறித்து, மலர்கள் செறிந்த வேங்கைமரத்தின் நிழலில் தங்கியிருக்கும் மலையை உடைய நம் தலைவனுக்காக
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்