சொல் பொருள்
(பெ) 1. மறைவிடம், 2. அடக்கம்
ஒடுக்கம் – துறவியர் அடக்கமாகிய இடம்
துறவர் அறிவர் உயிர் ஒடுக்கமாகிய இடம் ஒடுக்கம் எனப்படும்
சொல் பொருள் விளக்கம்
ஒடுக்கமான – குறுகலான இடம் ஒடுக்கம் என்று சொல்லப்படும். அடக்கத்தின் பின்னர் நிகழ்வது ஒடுக்கம். அதனால் அடக்க ஒடுக்கம் என வழக்கம் உண்டாயிற்று. அடக்கம் அடங்கும் தன்மையைக் குறியாமல் மூச்சை முழுவதாக நிறுத்திவிடுவதைக் குறிப்பதுபோல், ஒடுக்கம் ஒடுங்கிய இடத்தைக் குறியாமல் அடங்கிவிட்டவர்களை ஒடுக்கி வைக்கப்பட்ட புதை குழி மேடையையும், அதனைச் சூழ எழுந்த கட்டடப்பகுதியையும் குறித்து வழங்குவதாயிற்று. துறவியர்களின் ஒடுக்கங்கள் தமிழகத்தில் பலப்பல இடங்களில் இருப்பதும், ஆங்கு வழிபாடுகல் நிகழ்வதும் கண்கூடு.
துறவர் அறிவர் உயிர் ஒடுக்கமாகிய இடம் ஒடுக்கம் எனப்படும். ஒடுங்கி என்பது இறைமைப் பெயராகச் சுட்டும் சிவஞான போதம். தமிழகத் தென்பகுதிகளில் ஒடுக்கங்கள் பல திருக்கோயில் திருச்சுற்று பூந்தோட்டம் முதலியவற்றுடன் காணலாம்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
place of concealment, self restraint
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கண் மாறு ஆடவர் ஒடுக்கம் ஒற்றி – மது 642 கண்களினின்றும் (சடுதியில்)மறையும் கள்வர் ஒதுங்கியிருக்கின்ற இடத்தை ஒற்றியறிந்து புதுவை போலும் நின் வரவும் இவள் வதுவை நாண் ஒடுக்கமும் காண்குவல் யானே – கலி 52/24,25 புதியவன் போல் வருகின்ற உன்னுடைய வரவையும், இவளின் திருமண வெட்கம் கொண்ட அடக்கத்தையும் நான் பார்க்கவேண்டும்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு வழக்குச் சொல்
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்