சொல் பொருள்
(பெ.அ) 1. ஒளியுள்ள, ஒளிர்வுள்ள, 2. இயற்கை அழகுள்ள, பொலிவுள்ள, 3. சிறந்த
சொல் பொருள் விளக்கம்
ஒளியுள்ள, ஒளிர்வுள்ள,
ஒள் என்ற பெயரடையின் முன் வல்லின/மெல்லின எழுத்துக்களில் தொடங்கும் சொற்கள் வரும்போது
ஒள் என்பது ஒண் என்று திரியும். (ஒண் கதிர், ஒண் செங்காந்தள், ஒண் தளிர், ஒண் நுதல், ஒண் பூ, ஒண் மணி)
ஆனால், உயிரெழுத்து அல்லது இடையின எழுத்து முதல் எழுத்தாக அமையும் சொற்கள் முன் வரின்,
ஒள் என்பது திரியாமல் அப்படியே இருக்கும்.
பார்க்க ஒள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
bright, brilliant, graceful, lovely, excellent, preeminent
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஒண் தொடி தட கையின் ஏந்தி – திரு 54 ஒளிருகின்ற தொடியையுடைய பெரிய கையில் ஏந்தி மணி மயில் உயரிய மாறா வென்றி பிணிமுக ஊர்தி ஒண் செய்யோனும் என – புறம் 56/7,8 நீலமணி போலும் நிறத்தையுடைய மயிற்கொடியை எடுத்த, மாறாத வெற்றியையுடைய பிணிமுகம் என்னும் யானையாகிய ஊர்தியையுடைய பொலிவுமிக்க முருகனும் கொதித்து உராய் குன்று இவர்ந்து கொடி கொண்ட கோடையால் ஒதுக்கு அரிய நெறி என்னார் ஒண் பொருட்கு அகன்றவர் – கலி 150/15,16 ஞாயிறு குன்றினில் ஏறும்போதே கொதித்து உராய்ந்துகொண்டு ஏறும் நீண்ட கோடைக் காலத்தில் போவதற்குக் கடினமான வழி என்று எண்ணிப்பார்க்காமல், தான் கருதிய சிறந்த பொருளுக்காகப் பிரிந்து சென்றவர்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்
நன்றி 🙏🙏🙏