சொல் பொருள்
(பெ) 1. அறிவு, 2. இயற்கையழகு, பொலிவு, 3. ஒளி,ஒளிர்வு,
சொல் பொருள் விளக்கம்
அறிவு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
wisdom, loveliness, natural grace, brightness, brilliance
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புறஞ்சொல் கேளா புரை தீர் ஒண்மை பெண்மை சான்று பெரு மடம் நிலைஇ – பதி 70/13,14 புறத்தே இகழ்ந்து கூறும் சொற்களைப் பெரிதாக எண்ணாத குற்றம் நீங்கிய அறிவினையும் நாணம் நிறைந்து பெரிய மடமென்னும் குணம் நிலைபெற்று கண்ணும் நுதலும் கவுளும் கவவியார்க்கு ஒண்மை எதிரிய அம் கையும்- கலி 83/17,18 ‘உன்னுடைய கண்களாலும், நெற்றியாலும், கன்னங்களினாலும், உன்னைத் தழுவும் உன் தாயர்க்குப் பொலிவினைத் தோற்றுவிக்கும் அழகிய கைகளினாலும், நின் புரத்தலும் நோன்மையும் ஞாலத்து உள நின் நாற்றமும் ஒண்மையும் பூவை உள – பரி 4/28,29 அனைவரையும் காக்கும் இயல்பும், பொறுமையும் பூமியினிடத்தில் இருக்கின்றன; உன் மணமும் ஒளியும் பூவில் உள்ளன;
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்