சொல் பொருள்
(பெ) நடை,
ஒதுக்கம் – ஒதுங்கும் இடம்
சொல் பொருள் விளக்கம்
ஒதுங்கிய இடம் – ஒதுக்கமான இடம் – ‘ஒதுக்கம்’ எனப் படும். ‘ஒதுக்கப்பட்ட இடம்’ என்பதும் ‘ஒதுக்கிடம்’ என இந்நாள் வழக்கிலும் உள்ளது. இங்குச் சொல்லப்படும் ஒதுக்கம் வேறு. அயற்பாலினர் அரவம் இல்லாமல் ஆடவரும் மகளிரும் தனித் தனியே கழிப்பிடம் நாடுதல் இந்நாட்டில் பெருவழக்கு. சிற்றூர்களில் இன்றும் அந்நிலை மாறிற்றில்லை. அப்படி ஒதுங்கும் இடத்திற்கு ‘ஒதுக்கம்’ என்பது பெயர். ஒதுங்குதல் என்பது நீர் கழித்தலுக்கும், மலங்கழித்தலுக்கும் ஒதுங்கி மறைதலைக் குறித்து வந்ததாம்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
walk, gait
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இலங்கு வளை தெளிர்ப்ப வீசி சிலம்பு நக சின் மெல் ஒதுக்கமொடு மென்மெல இயலி நின் அணி மாண் சிறுபுறம் காண்கம் சிறு நனி ஏகு என – அகம் 261/6-8 ஒளி பொருந்திய வளைகள் ஒலிக்கக் கையை வீசி, சிலம்பொலி விளங்க சிலவாய மெல்லிய நடைகொண்டு மெல்ல மெல்லச் சென்று நினது அழகு மாண்புற்ற முதுகினை யாம் காண்போமாக, சிறிது தூரம் முன் நடக்க என யாம் கூற
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு வழக்குச் சொல்
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்