Skip to content

சொல் பொருள்

(பெ) 1. நடத்தல், செல்லுதல், 2. புகலிடம்,  3. நடை

சொல் பொருள் விளக்கம்

நடத்தல், செல்லுதல்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

walking, passing, shelter, walking, gait

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

ஒதுக்கு அரும் வெம் சுரம் இறந்தனர் – நற் 177/3

செல்லுதற்கு அரிய வெவ்விய சுரத்தின்கண் செல்லுதலைத் துணிந்துவிட்டனர்

பதுக்கை நீழல் ஒதுக்கு இடம் பெறாஅ – நற் 352/8

கற்குவியல்களின் கீழேயுள்ள நிழலைக் கண்டு அங்கேதான் தங்குதற்கு ஏற்ற இடம் பெறாது
– ஔவை.சு.து.உரை

பதுக்கைத்து ஆய ஒதுக்கு அரும் கவலை – ஐங் 362/1

பதுக்கைகளையுடைத்தாகிய இடையூறுற்றுழி ஒதுங்குதற்கு இடம் அரிய கவர்த்த நெறிகளின்பால்
– பொ.வே.சோ. உரை

தடவரல் கொண்ட தகை மெல் ஒதுக்கின்
வளை கை விறலி என் பின்னள் ஆக – புறம் 135/3,4

உடல் வளைவைப் பொருந்திய பயில அடியிட்டு நடக்கிற மெல்லிய நடையினையுடைய
வளையை அணிந்த கையையுடையவிறலி என் பின்னே வர

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *