சொல் பொருள்
(பெ) புலி, உழை, மரை, கவரி, கராம், யானை, பன்றி, எருமை, கரடி ஆகியவற்றின் ஆண்
சொல் பொருள் விளக்கம்
புலி, உழை, மரை, கவரி, கராம், யானை, பன்றி, எருமை, கரடி ஆகியவற்றின் ஆண்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
male of certain animals
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இலங்கு ஏந்து மருப்பின் இனம் பிரி ஒருத்தல் – மலை 297 செம் கண் எருமை இனம் பிரி ஒருத்தல் – மலை 472 சிறு கண் பன்றி பெரும் சின ஒருத்தல் – நற் 82/7 கொல் களிற்று ஒருத்தல் – நற் 92/9 செந்நாய் வெரீஇய புகர் உழை ஒருத்தல் – அகம் 219/13 கடும் பகட்டு ஒருத்தல் நடுங்க குத்தி – அகம் 397/10 முணங்கு நிமிர் வயமான் முழு வலி ஒருத்தல் – புறம் 52/2
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்