Skip to content

சொல் பொருள்

(வி) 1. தண்டி, 2. கடிந்துகொள், 3. வெறு,

சொல் பொருள் விளக்கம்

தண்டி,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

punish, rebuke, dislike, be disgusted with

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

நீ மெய் கண்ட தீமை காணின்
ஒப்ப நாடி அ தக ஒறுத்தி – புறம் 10/3,4

நீ மெய்யாக மனத்தால் ஆராய்ந்து உறுதிசெய்துகொண்ட தீமையை ஒருவனிடத்தில் கண்டால்
அதனை நீதுநூல்களுக்குத் தக ஆராய்ந்து, அத் தீமைக்குத் தக்கதாகத் தண்டிப்பாய்

ஒறுப்ப ஓவலை நிறுப்ப நில்லலை – அகம் 342/1

உன்னை வன்சொல்கூறிக் கடிந்துகொள்ளவும் ஒழிகிறாய் இல்லை, இன்சொல்கூறி நிறுத்தவும் நிற்பாய் இல்லை

அறியாதாய் போல நீ
என்னை புலப்பது ஒறுக்குவென்-மன் யான் – கலி 97/1,2

ஒன்றும் தெரியாதவன் போல நீ
என்னிடம் கோபித்துக்கொள்வதை வெறுக்கிறேன் நான்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *