சொல் பொருள்
(வி) 1. சரியாக அமை, 2. இயலு, 3. பொறுத்துக்கொள், 4. உடன்படு, சம்மதி
சொல் பொருள் விளக்கம்
சரியாக அமை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
be fit, be suitable, be able to, possible, tolerate, forbear, agree, consent
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தினை கிளி கடிதலின் பகலும் ஒல்லும் – குறு 217/1 தினைக்காக வரும் கிளிகளை ஓட்டவேண்டியிருப்பின் பகலும் சரியாக அமையும் ஒல்லுவது ஒல்லும் என்றலும் யாவர்க்கும் ஒல்லாது இல் என மறுத்தலும் இரண்டும் ஆள்வினை மருங்கின் கேண்மை_பாலே – புறம் 196/1-3 தம்மால் கொடுக்க இயலும் பொருளை இயலும் என்று கொடுத்தலும், யாவர்க்கும் தம்மால் கொடுக்க இயலாத பொருளை இல்லை என்று சொல்லி மறுத்தலும் ஆகிய இரண்டும் தாளாண்மை உடையவரிடத்தில் உள்ளன. இறை வளை நெகிழ்பு ஓட ஏற்பவும் ஒல்லும்-மன் அயல் அலர் தூற்றலின் ஆய் நலன் இழந்த கண் கயல் உமிழ் நீர் போல கண் பனி கலுழாக்கால் – கலி 53/9-11 தோள்வளைகள் கழன்று ஓட வருத்தத்தை இவளால் தாங்கிக்கொள்ள முடியும் – அது எப்போதெனின் அண்டை அயலார் பழிகூறித் தூற்றுவதால், தம் அழகிய வனப்பை இழந்த கண்கள் பெரும் மீன்கள் தம் வாயிலிருந்து நீரைப் பீச்சியடிப்பது போல இவள் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து வராமலிருந்தால் மெல்லிய இனிய கூறலின் யான் அஃது ஒல்லேன் போல உரையாடுவலே – நற் 134/9,10 மென்மையாக இனிய மொழியைக் கூறிய வகையில் நான் அதற்கு உடன்படேன் போல உரையாடினேன்!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்