ஒல்லையூர் என்பது ஒலியமங்கலம்
1. சொல் பொருள்
(பெ) ஓர் ஊர்,
2. சொல் பொருள் விளக்கம்
ஓர் ஊர்,
ஒல்லையூர் என்பது புதுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்தது. இப்போது அதற்கு ஒலியமங்கலம் என்று பெயர்
வழங்குகிறது. இதனைச் சூழவுள்ள பகுதிஒல்லையூர் நாடு எனப்படும்.
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
a city in sangam period
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
வல் வேல் சாத்தன் மாய்ந்த பின்றை முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே – புறம் 242/6 வலிய வேலையுடைய சாத்தன் இறந்துபட்ட பின்பு முல்லையாய நீயும் பூக்கக்கடவையோ அவனது ஒல்லையூர் நாட்டின்கண் ஒத்து உணர்வார்க்கு ஒல்லையூர் புகல் ஆமே - திருமந்:1568/4
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்