சொல் பொருள்
(பெ) ஒளிநாட்டார்,
சொல் பொருள் விளக்கம்
ஒளிநாட்டார்,
வடவேங்கடம் தென்குமரி இடைப்பட்ட தமிழகம் ஆசிரியர் தொல்காப்பியனுள் காலத்துப் பன்னிரு நிலங்களாகப்
பகுக்கப்பட்டிருந்ததென்பது “செந்தமிழ்சேர்ந்த பன்னிரு நிலத்தும்” (எச்ச-4) என அவ் வாசிரியர் கூறுதலால் இனிது
விளங்கும். இப்பன்னிரு நிலங்களாவன: பொங்கர்நாடு, ஒளிநாடு, தென்பாண்டிநாடு, குட்ட நாடு, குடநாடு, பன்றிநாடு,
கற்காநாடு, சீதநாடு, பூழிநாடு, மலைநாடு, அருவா நாடு, அருவாவடதலை என்பன என்றும் இவற்றைத்
தென்கீழ்பால் முதலாக வடகீழ்பால் இறுதியாக எண்ணிக்கொள்க வென்றும் கூறுவர் சேனாவரையர்.
– https://ta.wikisource.org/wiki/பக்கம்:தொல்காப்பியம்_வரலாறு.pdf/269
“ஜயசிங்க குலகால வளநாட்டு வடசிறுவாயில் நாட்டு ஒளிப்பற்று வாளுவ மங்கலம்” என்ற புதுக்கோட்டை
சாசனத்தில் ஒளிப்பற்று என்றது இவ் ஒளிநாடு என்ப. – பொ.வே.சோ உரை விளக்கம்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
people of oli land
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பல் ஒளியர் பணிபு ஒடுங்க – பட் 274 பலராகிய ஒளிநாட்டார் தாழ்ந்து மறம் கெட்டு ஒடுங்கவும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்