சொல் பொருள்
(பெ.அ) 1. ஒளியுள்ள, ஒளிர்வுள்ள, 2. இயற்கை அழகுள்ள, பொலிவுள்ள, 3. சிறந்த, நல்ல,
சொல் பொருள் விளக்கம்
ஒளியுள்ள, ஒளிர்வுள்ள,
ஒள் என்ற பெயரடையின் முன் வல்லின/மெல்லின எழுத்துக்களில் தொடங்கும் சொற்கள் வரும்போது
ஒள் என்பது ஒண் என்று திரியும். (ஒண் கதிர், ஒண் செங்காந்தள், ஒண் தளிர், ஒண் நுதல், ஒண் பூ, ஒண் மணி)
ஆனால், உயிரெழுத்து அல்லது இடையின எழுத்து முதல் எழுத்தாக அமையும் சொற்கள் முன் வரின்,
ஒள் என்பது திரியாமல் அப்படியே இருக்கும்.
பார்க்க ஒண்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
bright, brilliant, graceful, lovely, excellent, preeminent
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இரவு பகல் செய்யும் திண் பிடி ஒள் வாள் – முல் 46 இரவைப் பகலாக்கும், திண்ணிய கைப்பிடியையுடைய ஒளிவிடும் வாளை புடை இலங்கு ஒள் வாள் புனை கழலோயே – புறம் 259/7 பக்கத்தில் ஒளிர்கின்ற பொலிவுபெற்ற வாளினையும், வீரக் கழலினையும் உடையவனே! கள் உடை நியமத்து ஒள் விலை கொடுக்கும் – பதி 75/10 கள் இருக்கும் கடைத்தெருவில் நல்ல விலைக்குக் கொடுக்கும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்