சொல் பொருள்
(பெ) 1. சென்று தங்குதல், 2. முடிவுறுதல், 3. கூவும் ஒலிக்குறிப்பு,
சொல் பொருள் விளக்கம்
சென்று தங்குதல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
going and staying, cessation, hello! calling attention
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஓ அற இமைக்கும் சேண் விளங்கு அவிர் ஒளி – திரு 3 உயிர் மனம் முதலிய கருவிகளில் சென்று தங்குதலில்லையாய் உள்ளத்துக்குள்ளெ ஒளிர்வதும், உள்ளத்திற்குத் தூரமாய் நின்று எங்கும் இயல்பாக விளங்குவதுமாகிய ஒளி. நீர் வார் நிகர் மலர் கடுப்ப ஓ மறந்து அறு குளம் நிறைக்குந போல அல்கலும் அழுதல்மேவலாகி – அகம் 11/12-14 நீர் சொரியும் ஒளி பொருந்திய மலரைப் போல, ஒழிதலின்றி நீர் அற்ற குளத்தை நிறைக்கும் மடையைப்போல நாளும் அழுதலைப் பொருந்தியவாகி காப்பு உடை வாயில் போற்று ஓ என்னும் யாமம் கொள்பவர் நெடு நா ஒண் மணி ஒன்று எறி பாணியின் – நற் 132/8-10 காவலையுடைய வாயில்களை நன்கு காத்துக்கொள்வீர் என்று கூவுகின்ற யாமக் காவலரின் நெடிய நாவையுடைய ஒள்ளிய மணி ஒன்றுபட இசைக்கும் தாளம்போல
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்