சொல் பொருள்
(வி) 1. உயர்த்து, 2. கொடு, 3. தெய்வத்துக்குப் படைசெலுத்து,
சொல் பொருள் விளக்கம்
உயர்த்து,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
lift up, give, grant, offer to a deity
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: திருமாவளவன் தெவ்வர்க்கு ஓக்கிய வேலினும் வெய்ய கானம் – பட் 299,300 திருமாவளவன் பகைவரை நோக்கி உயர்த்திய வேலைக்காட்டிலும் வெம்மை மிக்கது காட்டுவழி கை வார் நரம்பின் பாணர்க்கு ஓக்கிய நிரம்பா இயல்பின் கரம்பை சீறூர் – புறம் 302/6,7 கைகளால் இசைக்கும் நரம்பினை இயக்கிப் பாடும் பாணர்களுக்குக் கொடுத்த நிரம்பாத இயல்பினையுடைய கரம்பைகள் நிறைந்த சிற்றூர்கள் இல் உறை கடவுட்கு ஓக்குதும் பலியே – அகம் 282/18 மனையுறை தெய்வத்திற்குப்பலி செலுத்துவோமாக
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்