சொல் பொருள்
(பெ) 1. உயர்ச்சி, 2. எழுச்சி, 3. மலை,
சொல் பொருள் விளக்கம்
உயர்ச்சி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
height, elevation, rising, mountain,
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உள்ளூர் மாஅத்த முள் எயிற்று வாவல் ஓங்கல் அம் சினை தூங்கு துயில் பொழுதின் – நற் 87/1,2 நம் ஊரிலுள்ள மா மரத்தில் இருக்கும் முள் போன்ற பற்களைக் கொண்ட வௌவால், உயர்ந்த அழகிய கிளையில் தொங்கியவாறு துயிலும் பொழுதில் ஓங்கல் புணரி பாய்ந்து ஆடு மகளிர் – நற் 395/6 உயர்ந்து எழும் அலைகளுக்குள் பாய்ந்து விளையாடும் மகளிர் ஓங்கல் மிசைய வேங்கை ஒள் வீ – அகம் 228/10 மலையின் மேலுள்ள வேங்கை மரத்தின் ஒளி பொருந்திய மலர்கள்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்