சொல் பொருள்
ஓட்டமில்லாமை – வறுமை
சொல் பொருள் விளக்கம்
ஓட்டம் என்பது இயக்கம், அதிலும் விரைந்த இயக்கம், பணவாய்ப்பு இருந்தால் பலவகை ஓட்டங்களும் ஒருவர்க்குச் சிறப்பாக இருக்கும். பண ஓட்டமே மற்றை மற்றை ஓட்டங்களுக்கு அடிப்படை. பணமிருந்தால் சமையல் சாப்பாடு கொண்டாட்டமாக இருக்கும். நடையுடை சிறப்பாக இருக்கும். போக்கு வரவும் நிகழும். தொழில் தட்டின்றி விளங்கும். பணவோட்டமில்லாவிட்டால் எல்லாமும் படுத்துவிடும். ஆதலால் ஓட்டமில்லை என்பது கையில் ‘காசு’ போக்குவரத்து இல்லை என்பதைக் குறிக்கும். ‘பணம்’ பத்தும் செய்யும் என்பது பழமொழி. பொருளானாம் எல்லாம் என்பது திருக்குறள். பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்னும்போது ஓட்டமென்ன இருக்க முடியும்?
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்