சொல் பொருள்
ஓய்வு – வேலையின்றி ஓய்ந்திருத்தல்.
ஒழிவு – ஒரு வேலை முடித்து வேறொரு வேலையில் அல்லது பொழுது போக்கில் ஈடுபட்டிருத்தல்.
சொல் பொருள் விளக்கம்
‘ஓய்வு ஒழிவு இல்லை’ எனப்பலர் குறைப் பட்டுக் கொள்வர். சிலர்க்கோ ‘ஓய்வு ஒழிவு அன்றி வேலையே இல்லை’ என்னும் நிலைமையும் உள்ளது. ஓய்வு என்பது படுத்துக் கொள்வதே என்று கருதுவாரும் உளர். அவர் ‘ஓய்வு சாய்வு’ என்னும் இணைச் சொல்லுக்கு இலக்கியமானவர்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்