Skip to content

சொல் பொருள்

1. (வி) 1. ஆராய்,  2. உற்றுக்கேள், 3. தெரிந்தெடு, மேற்கொள், 4. கருது, நினை,

2. (பெ.அ) ஒரு என்பதன் மாற்றுவடிவம்,

3. (இ.சொ) அசைநிலை,

சொல் பொருள் விளக்கம்

ஆராய், 

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

examine, listen attentively, select, regard, think, an adjectival form of ‘one’, expletive

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

அரும் சுரம் செல்லுநர் ஆள் செத்து ஓர்க்கும்
திருந்து அரை ஞெமைய பெரும் புன குன்றத்து – அகம் 395/12,13

அரிய காட்டினில் செல்வோர் ஆளின் குரல் என்று நினைத்து ஆராயும்
செவ்விய அடி பொருந்திய ஞெமை மரங்களையுடைய பெரிய தினைப்புனங்களையுடைய குன்றில்

இன் பல் இமிழ் இசை ஓர்ப்பனள் கிடந்தோள் – முல் 88
இனிய பலவாகிய முழங்குகின்ற ஓசையை உற்றுக்கேட்டவளாய்க் கிடந்தோளுடைய

கொடிது ஓர்த்த மன்னவன் கோல் போல – கலி 8/2
கொடுமை செய்வதையே மேற்கொண்ட மன்னனின் கொடுங்கோலாட்சியைப் போல

கறி வளர் சிலம்பில் வழங்கல் ஆனா
புலி என்று ஓர்க்கும் இ கலி கேழ் ஊரே – கலி 52/17,18

மிளகுக் கொடிகள் வளரும் மலைச் சாரலில் ஓயாமல் திரியும்
புலி என்று உன்னை எண்ணிக்கொள்வர் இந்த செருக்கு பொருந்திய ஊர்மக்கள்

அன்னாய் இவன் ஓர் இள மாணாக்கன் – குறு 33/1
தோழியே! இந்தப் பாணன் ஓர் இளம் மாணாக்கன் போல் இருக்கிறான்

மயில் ஓர் அன்ன சாயல் – மது 706
மயிலைப் போன்ற சாயல்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *