சொல் பொருள்
ஓவியம் – அழகு, அருமை
அருமைப் பொருளில் நெல்லை மாவட்டத்தில் வழங்குகின்றது.
சொல் பொருள் விளக்கம்
ஒன்றைப் பார்த்து வரைந்த ஒன்று ஓவியம். அஃது ஒவ்வ அமைந்த தன்மையால ஒவ்வியம் ஓவியம் எனப்படுகின்றதாம். ஓவியம் கண்டார் கண்ணையும் கருத்தையும் வயப்படுத்துதலால் அதனை வரையும் ஓவியரைக் கண்ணுள் வினைஞர் என முன்னையோர் குறித்தனர். காண்பார் கண்ணிடத்தே தம் கலைத்திறம் காட்டவல்லார் என்பது அதன் பொருள். ஓவியம் அழகாக இருத்தலின் அழகுக்கே ஓவியம் என்னும் ஒரு சொல்லும் உண்டாயிற்று, ‘நீ பெரிய ஓவியம்’ என்பதில் அழகு அருமை என்னும் இரண்டும் சுட்டிய எள்ளல் உண்மை அறிக.
ஓவியம் பொது வழக்கில் சித்திரத்தைக் குறிக்கும். ‘நீதானா ஓவியம்’ ‘அது என்ன ஓவியமாய்ப் போய் விட்டது’ என்னும் பேச்சு வழக்கில் அஃது அருமைப் பொருளில் நெல்லை மாவட்டத்தில் வழங்குகின்றது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்