சொல் பொருள்
கக்கல் – வாந்தியெடுத்தல்
விக்கல் – குடலுக்குச் செல்லாமல் தொக்கிக் கொள்ளுதல்.
சொல் பொருள் விளக்கம்
கக்கலில் ஒலியுண்டாகும்; விக்கலில் திணறலுண்டாகும். இனி விக்கல் நீர் வேட்கையால் உண்டாவதாயின் அதற்கு ஒலியுண்டாம்.
கக்கல் ‘கக்குவான் நோய்’ என ஒரு நோயாகக் குழந்தைகளை ஆட்டிப் படைப்பதுண்டு. விக்கலும் நோயாக முதியவர்களை வாட்டுவதுண்டு. முடியாத நிலையில் படுத்தவரைக் “கக்கலும் விக்கலுமாகக் கிடக்கிறார்; எப்பொழுதோ தெரியாது” எனக் கைவிரிப்பதுண்டு.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்