கங்கை என்பது இந்தியாவின் தேசிய ஆறு
1. சொல் பொருள்
(பெ) 1. இந்தியா மற்றும் வங்கதேச நாடுகளின் வழியாக பாய்கின்ற ஒரு ஆறாகும்
2. சொல் பொருள் விளக்கம்
இந்தியா மற்றும் வங்கதேச நாடுகளின் வழியாக பாய்கின்ற ஒரு ஆறாகும். இந்தியாவின் தேசிய ஆறு.
இராஜேந்திர சோழன் 1019இல் கங்கை வரை படையெடுத்து சென்று வெற்றியும் கண்டார். அதனால் கங்கை கொண்ட சோழன் என்ற பட்டமும் பெற்றார். அதன் நினைவாக 1023இல் கங்கை கொண்ட சோழபுரம் எனும் புதிய தலைநகரை உருவாக்கினார்.
கங்கை வரை பெற்ற வெற்றியின் நினைவாக கங்கை கொண்ட சோழப் பேரேரி அமைக்கப்பட்டது. இதற்கு சோழகங்கம் என்றும் பெயர் உண்டு
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
River Ganga, Ganges
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
பொன் கொழித்து இழிதரும் போக்கு அரும் கங்கை/பெரு நீர் போகும் இரியல் மாக்கள் – பெரும் 431,432
கங்கை அம் பேரியாறு கடல் படர்ந்து ஆஅங்கு – மது 696
கங்கை வாரியும் காவிரி பயனும் – பட் 190
கங்கை வங்கம் போகுவர்-கொல்லோ – நற் 189/5
கங்கை அம் பேர் யாற்று கரை இறந்து இழிதரும் – நற் 369/9
மீன் ஆரம் பூத்த வியன் கங்கை நந்திய – பரி 16/36
சீர் மிகு பாடலி குழீஇ கங்கை/நீர் முதல் கரந்த நிதியம்-கொல்லோ – அகம் 265/5,6
மன்பதை எல்லாம் சென்று உண கங்கை/கரை பொரு மலி நீர் நிறைந்து தோன்றி ஆங்கு – புறம் 161/6,7
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது