சொல் பொருள்
கசக்கிப் பிழிதல் – கடுமையாய் வேலை வாங்கல்
சொல் பொருள் விளக்கம்
பழங்களைக் கசக்குதலும், கசக்கியதைப் பிழிந்து சாறு எடுத்தலும் நடைமுறைச் செய்தி. அதுபோல் சிலரை வாட்டி வேலை வாங்கி அவ்வேலையால் கிடைக்கும் பயனைத்தாமே எடுத்துக் கொள்ளுதல் செல்வர்கள் அல்லது அச்செல்வார்க்குத் துணை நிற்பார் செயல். இச் செயலை உவமையால் குறிப்பதே கசக்கிப் பிழிதல் என்பதாம். கசக்குதல் என்பது இடக்கரடக்காகவும் வரும். பழங்களையன்றிக் கரும்பை ஆட்டிச் சாறு கொள்வதும் அச்சாற்றால் கட்டியாக்கிக் கொள்ளலும் ‘ஆட்டிப் படைத்தல்’ எனப்படும். மாவாட்டல் எண்ணெய் ஆட்டல் என்பனவெல்லாம் இவ்வகை சார்ந்தன
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்