சொல் பொருள்
கசிதல் – அன்புறுதல்
சொல் பொருள் விளக்கம்
புது மண் பானையில் நீர்வைத்தால் கசிவு உண்டாகும். அதுபோல் குளக்கரை, வயற்கரை, வரப்பு ஆகியவற்றிலும் நீர் உள்ளபோது கசிவுண்டாம். கசிதல் என்பது நீர் சிறிதளவாய் ஊறி வெளிப்படுதலாம்.
இனி இக் கசிதல் அன்புடையார்க்கும் உண்மை, “அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்” என்னும் குறளால் விளங்கும். ஒருவனிடத்தே அன்பு உள்ளது என்பதற்கு அடையாளமாக இருப்பது கண்நீர் எனப்படுதலால் அக் கண்ணீர்க் கசிவே இங்குக் குறிக்கப்படுவதாம்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்