கச்சை என்பதன் பொருள்உள்ளாடை,இடுப்புப் பட்டை,கோவணம், கிண்கிணி.
1. சொல் பொருள் விளக்கம்
(பெ) அரைப்பட்டி, இடுப்பில் இறுக்கிக் கட்டும் துணிப்பட்டை, இது கச்சு என்றும் அழைக்கப்படும், பெண் மார்புக்கு அணியும் உள்ளாடை, கச்சை என்றால் பழங்காலத்தில் கவசம் என்றும், கயிறு என்றும் பொருள் உண்டு, யானைக் கீழ் வயிற்றிற் கட்டுங்கயிறு, முழுப்புடவை, கிறித்தவ குருக்கள் அணியும் வழிபாட்டு ஆடையின் இடுப்புப் பட்டை, பொதுவாக, கச்சை கட்டு என்றால் துணி அல்லது துண்டை கட்டு என்றுபொருள். கோவணம், கிண்கிணி, கச்சை கருவாடு
மொழிபெயர்ப்புகள்
2. ஆங்கிலம்
girdle, Loin, cloth belt, brasier, sash
3.தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
விரை பரி வருந்திய வீங்கு செலல் இளையர் அரை செறி கச்சை யாப்பு அழித்து அசைஇ – நற் 21/1,2 விரைந்த ஓட்டத்தினால் வருந்திய நெடுந்தொலைவு பயணம்செய்த படைமறவர் இடுப்பில் கட்டிய கச்சையை அவிழ்த்துவிட்டுத் தங்கியவாறு
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்