சொல் பொருள்
கடன் – காலம் குறித்து வட்டி மேனி குறித்து ஒப்படை தந்த பெறும் தொகை. எழுத்துறுதியோ வாக்குறுதியோ இரண்டுமோ இதற்கு உண்டு.
உடன் – கைம்மாற்று; கேட்டவுடன் அல்லது வாங்கியவர் கையில் பணம் வந்தவுடன் தருவதாகிய தொகை. வட்டியற்றது இது.
சொல் பொருள் விளக்கம்
“கடன் உடன் வாங்கியாவது செய்வதைச் செய்துதானே தீர வேண்டும்” என்று வலியுறுத்தப் பெறுவதும். அவரவரே மேற்கொள்வதும் வழக்காறாகும். இத்தகு முனைப்பால் இடர்ப்படுவார் மிகப்பலர். வேண்டாச் செலவுக்கும் வெட்டிச் செலவுக்கும் இம் முனைப்புக் காட்டுவார் நிலைமை என்னாம்?
“கடன் இல்லாக் கஞ்சி கால்வயிற்றுக் கஞ்சி” என்றும் “கடன் கொடுத்தான் நட்பை உடன் கெடுத்தான்” என்றும் வழங்குவனவற்றை அறிய வேண்டுமே. “கடன் கொண்டான் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்” என்பது கம்பன் தலையில் கட்டப்பட்ட எவனோ ஒரு கொம்பன் பாட்டு. இராமாயணத்தில் இல்லாதது.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்