சொல் பொருள்
(பெ) 1. பாலை நிலவழி, 2. தெய்வக்கடன், 3. கடமை,
சொல் பொருள் விளக்கம்
பாலைநிலவழி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
difficult path in a barren tract, religious obligation, duty
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வெம் துகள் ஆகிய வெயில் கடம் நீந்தி – ஐங் 330/1 பொசுக்குகின்ற புழுதிக்காடாகிய வெயில் காயும் இந்தப் பாலைவழியைக் கடந்து நிலை உயர் கடவுட்கு கடம் பூண்டு – கலி 46/16 உயர்நிலைத் தெய்வங்களுக்கு நேர்ந்துகொண்டு இன்னும் கடம் பூண்டு ஒரு_கால் நீ வந்தை உடம்பட்டாள் – கலி 63/12 இன்னமும் உன் விருப்பப்படி நடப்பதை தன் கடமையாகக் கொண்டு உனக்கு உடன்பட்டாள்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்