சொல் பொருள்
கடித்தல் – சண்டையிடல்
சொல் பொருள் விளக்கம்
நாய் பூனை முதலியவை ஒன்றையொன்று பகைத்தால் கடிப்பாலேயே தம் பகையைத் தீர்க்கும். கடித்தல் அவற்றின் சண்டைக்கு அறிகுறி. ஆனால் அந்நாயும் பூனையும் நட்பாக இருக்கும்போதும் கடிக்கும். அதனைச் சண்டைக் கடியாகக் கொள்வதில்லை. பொய்க்கடி, அன்புக்கடி எனப்படும். அவ்வாறே நெருங்கிப் பழகிய இருவர் தங்களுக்குள் சண்டையிடும்போது, “என்ன இருவரும் இந்தக் கடி கடிக்கிறீர்கள்! இந்ததக் கசிவும் வேண்டாம்; இந்தக் கடியும் வேண்டாம்” என்று அவர்களை அறிந்தோர் அறிவுரை கூறுவது வழக்கம் “போதும்; கடியாதே” எனச் சண்டையிடுபவர் தங்களுக்குள் கூறுவதும் உண்டு. கடிப்பவர் அடுத்த நேரமே கடி மறந்து கசிபவர் என்க.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்