சொல் பொருள்
(வி) 1. விரை, 2. மிகு
சொல் பொருள் விளக்கம்
விரை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
move fast, blow hard (as wind), increase
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: துஞ்சா கண்ணர் காவலர் கடுகுவர் – அகம் 122/6 துயிலாத கண்களையுடையராய் ஊர்க்காவலர் விரைந்து சுழல்வர் கால் பொருது இடிப்பினும் கதழ் உறை கடுகினும் உரும் உடன்று எறியினும் ஊறு பல தோன்றினும் – நற் 201/8,9 காற்று மோதிவீசினாலும், சீறும் பெருமழை ஓங்கியடித்தாலும் இடி சினந்து அறைந்தாலும், தீங்குகள் பல நேர்ந்தாலும் ஞாயிறு கடுகுபு கதிர் மூட்டி காய் சினம் தெறுதலின் – கலி 8/3 ஞாயிறு மிகுகின்ற அனல் பரக்கும் கதிர்களைச் செலுத்திக் காய்கின்ற வெப்பத்தால் சுடுதலால்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்