சொல் பொருள்
உறைப்பு தூக்குதலாக இருக்கும் துவையல். அக் கடுமை கருதிக் கடுப்பான் என்பது ஒட்டன்சத்திர வட்டார வழக்கு
சொல் பொருள் விளக்கம்
தயிர்மோர் விட்டு உண்பதற்கு ஊறுகாய் போன்ற மற்றொன்று துவையல் ஆகும். அது மற்றைத் தொடுகறி விடுகறி ஆகியவற்றினும் உறைப்பு தூக்குதலாக இருக்கும். அக் கடுமை கருதிக் கடுப்பான் என்பது ஒட்டன்சத்திர வட்டார வழக்கு. வெற்று வற்றலை அரைத்தே காரத் துவையல் எனத் தொடலும் உண்டு. அதன் கடுப்பு கண்ணீர் வரவைக்கவும் வல்லது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்