சொல் பொருள்
(பெ) 1. தேள், குளவி ஆகியவை கொட்டும்போது ஏற்படும் கடும் வலி,
2. வேகம், விரைவு,
3. சினம்,
கடுஞ்சினம், உள்வேக்காடு என்னும் பொருளில் வழங்குதல் வட்டார வழக்காகும்.
நீர்க் கடுப்பு என்பது வெப்பு மிகையால் ஏற்படும் துயர்
சொல் பொருள் விளக்கம்
கடுமை என்னும் பொருளில் கடுப்பு என்று வழங்குவது பொதுப் பொருள். அது கடுஞ்சினம், உள்வேக்காடு என்னும் பொருளில் வழங்குதல் வட்டார வழக்காகும். “அவன் கடுப்பு இன்னும் தீரவில்லை” என்பர். “உன் கடுப்பு என்னை என்ன செய்துவிடும்?” என்பதும் உண்டு. நீர்க் கடுப்பு என்பது வெப்பு மிகையால் ஏற்படும் துயர். இது தென்னக வழக்கு.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Throbbing pain, burning sensation, as that caused by the sting of a wasp
speed
violent anger
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தேள் கடுப்பு அன்ன நாட்படு தேறல் – புறம் 392/16 தேள் கொட்டும்போது ஏற்படும் வலியைப்போன்ற உணர்வைத் தருகின்ற நாள்பட்ட கள் கால் கடுப்பு அன்ன கடும் செலல் இவுளி – அகம் 224/5 காற்றின் வேகத்தைப் போன்ற விரைந்த ஓட்டத்தையுடைய குதிரை கடு நவை அணங்கும் கடுப்பும் நல்கலும் – பரி 4/49 மிகவும் துன்பம் உண்டாகும்படி வருத்தும் சினமும், அருள்புரிதலும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு வழக்குச் சொல்
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்