சொல் பொருள்
கடுவாய் நோட்டு – நூறு உரூபாத்தாள்
சொல் பொருள் விளக்கம்
கடுவாய் என்பது பெரும்புலி! பதினாறு அடி தாவும் வேங்கையைக் கடுவாய் என்பர். அதன் பிளந்த பெருவாயையும் அதன் கொடுங்காட்சியையும் கண்டு கடுவாய் என்றனர். ‘கடுவாய்’ எளிமையாகக் காணக் கூடிய விலங்கில்லை. செறிந்த காடுகளின் இடையே அரிதில் வாழ்வது. அதனைத்தேடி முயன்றே காணமுடிíம். அதுபோல் அரிதில் காணக்கூடிய பெரிய பணத்தாள் ‘கடுவா நோட்டு’ எனப்படுகிறது. முன்பு “நூறு மட்டும் தேடு; நூற்றுக்கு மேல் ஊற்று’ என்பது பழமொழி. இப்பொழுது நூறு உருபா என்பது பழைய சல்லிக் காசு நூறுக்கு ஒப்பு. கடுவா நோட்டு என்பது பழநாள் பணத்தாள் மதிப்பை விளக்கும் வரலாற்று வழக்காறாம்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்