சொல் பொருள்
கடுவாய் – கொடுமையான வாயையுடைய பெரும்புலி.
புலி – உடலில் வரியும் புள்ளியும் உடைய சிறுபுலி.
சொல் பொருள் விளக்கம்
‘வாயைப் பிளக்குதடி- கையுறை, வாளும் உருவுதடி’ என்பார் கவிமணி. இது கடுவாய்ப் புலியாம்.
சிறுபுலி ‘சிறுத்தை’ எனப்படும்.
‘கடுவாய்ப் புலி’ என்றால் கடுவாய் ஆகிய புலி என்றாம். ‘கடுவாய் புலி’ என்றால் கடுவாயும் புலியும் என்றாம்.
“கடுவாய் புலி காட்டில் திரியும்; கவனித்துப்போ” என்பது பட்டறிவாளர் உரை.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்