சொல் பொருள்
கடைக்கண் காட்டல் – குறிப்பால் கட்டளையிடல்
சொல் பொருள் விளக்கம்
கண்ணடித்தல் காதல் தலைவன் பாற்பட்டதெநீன் இக்கடைக்கண் காட்டல் காதல் தலைவி பாற்பட்டதாம். அவள் அவனினும் அரிதிற் புலப்படக் காட்டலால் அடித்தல் வினையின்றிக் காட்டல் அளவில் நின்றதாம். “காரிகையார் கடைக்கண் காட்டிவிட்டால் மைந்தர்க்கு மாமலையும் சிறு கடுகாகும்” என்பார் பாவேந்தர். அவ்வளவு எளிமையாகப் புரட்ட வைத்து விடுமாம் அக்காதற் கண்காட்டல்! ‘இந்தத வில் என்ன, எந்த வில்லையும் முரிக்க முடியுமாம் சீதையைக் கண்ட ராமனுக்கு’
“குறிப்பறிதல்,” என்னும் ஓரதிகாரப் பெயர் ஈரிடத்து வள்ளுவத்தில் இயைந்தமையே இதன் நுண்மையைக் காட்டும்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்