சொல் பொருள்
கடைந்தெடுத்தல் – அகவையை மீறிய அறிவு
சொல் பொருள் விளக்கம்
தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுத்ததிலிருந்து வந்த வழக்குச்சொல் இது. பாலின் அளவு காயவைக்கும் பொழுது சுண்டும். அதன்பின் பிரையிட்டுத் தயிராக்கிக் கடைந்தால் வெண்ணெய் திரளும். அத்திரள் சிறிதாயினும் அப்பாலின் ஊட்டம் அனைத்தும் அத்திரளில் அடங்கிவிடுகிறது. அது போல் சிறிய அகவையில் பெரிய ஆளுக்குரிய அறிவு ஆற்றல் வினாவுதல் இருப்பின் ‘கடைந்தெடுத்தவன்’ அவன் என்பர். ஆனால் பாராட்டுதலாக அஃது அமையாமல் இகழ்தலாக வழங்குகின்றது. ஏனெனில் அகவைக்கு விஞ்சியதும் பொருந்தாததும் ஆகிய அறிவுக்கூர்ப்பே அவ்வெளிப்பாடாக இருத்தலால் சிறந்ததாக இருந்தால் “சிறுப்பெருமை” என்றும் “சிறு முதுக்குறைவு” என்றும் சொல்லப்படும்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்