சொல் பொருள்
கடை – தனித்தனியாய் அமைந்த வணிக நிலையம்.
கண்ணி – தொடராக அமைந்த கடை வீதியும் சந்தையும்.
சொல் பொருள் விளக்கம்
கடை – இடம் என்னும் பொருள் தரும் இச்சொல் வாயில் எனப் பொருள் பெற்றது. தலைக் கடை, புறக்கடை அல்லது புழைக்கடை என்பவற்றைக் கருதுக. கடையிலே வாயிலிலே – வணிகம் செய்தமையால் அதற்குக் கடையெனப் பெயர் வந்தது.
கண்ணி – இணை இணையாகத் தொடுக்கப்பட்ட அல்லது வரிசையாய் அமைந்த கடைத் தெருவும் சந்தையும் கண்ணி எனப்பட்டன.
கண்ணிணை போல் அமைக்கப்படும் ‘கண்ணி என்னும் பாவகையையும், பூக் கண்ணியையும் வலைக் கண்ணியையும் கருதுக.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்