சொல் பொருள்
கட்டணம் என்பது பாடை என்னும் பொருளில் நாகர்கோயில் வட்டார வழக்காக உள்ளது
சொல் பொருள் விளக்கம்
வண்டிச் சீட்டுக்குத் தரும் காசு கட்டணம் எனப்படும். சரக்குக் கட்டணம், அஞ்சல் கட்டணம் என்பவை வழக்கில் உள்ளவை. கட்டணம் என்பது பாடை என்னும் பொருளில் நாகர்கோயில் வட்டார வழக்காக உள்ளது. பாடு என்பது படுதல்; கண்ணிமை மூடுதல்; உறங்குதல்; செத்தாரை எடுத்துச் செல்லும் படுக்கை அமைப்பு. கண்பாடு = உறக்கம். பாடிவீடு = படுக்கை இடம். கட்டைகளை வைத்துக் கட்டுதல் வழி வந்த
பெயர் இது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்