சொல் பொருள்
கட்டிக் கொடுத்த சோறு – கற்றுக்கொடுத்த கல்வி
சொல் பொருள் விளக்கம்
கட்டிக் கொடுத்த சோற்றின் அளவு மிகுமா? சுவைதான் மிகுமா? தந்த அளவே அளவாய் அமையும். அதுபோல், கற்றுக் கொடுத்த அளவிலேயே அமையும் கல்வி கட்டிக் கொடுத்த சோறாகச் சொல்லப்படும். “கட்டிக்கொடுத்த சோறும் கற்றுக் கொடுத்த கல்வியும் எந்த மட்டோ அந்த மட்டே” என்னும் பழமொழி இவ்வழக்குத் தொடரின் பொருளை விளக்கும். கட்டிக் கொடுத்த சோறு ‘கட்டுசோறு’ தோளில் அதனைப் போட்டுக் கொண்டு போன வழக்கத்தால் தோட் கோப்பு என்பதும் அது.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்